உள்ளாட்சி தினம் - கீழப்பழூவூரில் கிராமசபை கூட்டம்
Update: 2023-11-02 04:23 GMT
கிராமசபை கூட்டம்
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் தனலெட்சுமி மருதமுத்து தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், ஊராட்சியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிபணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் அரசின் சார்பிலான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதனையடுத்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.