வெள்ளக்கல்பட்டியில் கிராமசபை கூட்டம்

Update: 2023-11-02 03:21 GMT

கிராம சபை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்  நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டதற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சி, ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கௌரவித்தல்,  வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், லலிதா பாலாஜி துணைத் தலைவர் ராஜா ஊராட்சி செயலர் நாகன் உள்ளிட்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News