கிராம அளவிளான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கிராம அளவிளான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்திய காவல்துறையினர்
By : King 24x7 Website
Update: 2023-11-01 16:38 GMT
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம அளவிளான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் கீதா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கவுன்சிலர் ராஜேஷ் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம அளவிளான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண்கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி குறித்தும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் இலவச உதவி எண்கள் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 உமன் ஹெல்ப் டெஸ்க் 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை புகார் எண் 10581, உதவி எண் 18004259565 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.