மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் !

இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக அரக்கோணம் தெற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-04 06:08 GMT

இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக அரக்கோணம் தெற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அரிசந்திராபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக, புழுக்கம் மற்றும் கொசுக்கடியால் குழந்தைகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்து, குறைந்த அழுத்த மின்சாரம் வருவதாகவும், இது குறித்து புகார் தெரிவிக்க மோசூரில் உள்ள அரக்கோணம் தெற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு பல முறை வந்த போதும் அதிகாரிகள் இருப்பதில்லை, ஊழியர்கள் மட்டுமே உள்ளனர் என கூறப்படுகிறது.

அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட புகாரின் மீது இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் எனக்கூறி 100-க்கும் மேற்பட்டவர்கள் மின்வாரிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு, குறைந்த மின்னழுத்தம் சீர் செய்யப்படும் என்றும், சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் விரைவில் சீர் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர்.

Tags:    

Similar News