கோயில் காளை உயிரிழப்பு:கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
கோயில் காளை உயிரிழப்புக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 08:54 GMT
உயிரிழந்த காளை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் மதகடி கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்காக காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த காளை பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று உயிரிழந்தது.
இதையடுத்து கிராமமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை உடலுக்கு வேஷ்டி, துண்டு, மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காளை உடல் அடக்கம் செய்யப்பட்டது.