விழுப்புரம் மாவட்ட அரசுத்துறை அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு...

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ‘சமத்துவ நாள்” உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

Update: 2024-04-13 06:33 GMT

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ‘சமத்துவ நாள்” உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ‘சமத்துவ நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் -14 ஆம் நாளினை சமத்துவ நாளாக கடைபிடித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு‘சமத்துவ நாள்” உறுதிமொழியாக சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி வழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அணம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லா சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News