விழுப்புரம் தேர்தல் புறக்கணிப்பு

விழுப்புரம் அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராமத்தில் பேனர் வைத்து எச்சரித்துள்ளனர்.

Update: 2024-04-02 05:42 GMT

விழுப்புரம் அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராமத்தில் பேனர் வைத்து எச்சரித்துள்ளனர்.


விழுப்புரம் அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராமத்தில் பேனர் வைத்து எச்சரித்துள்ளனர். விழுப்புரம் அருகே கண்டமானடி ஊராட்சிக்கு செல்லும் சாலையில், ரயில்வே கேட் உள்ளது. 50 ஆண்டுகளாக தொடரும் இந்த கேட், திடீரென கடந்த மாதம் 22ம் தேதி மூடப்பட்டது.

ஜானகிபுரம் புதிய மேம்பாலம் வழியாக, 5 கி.மீ சுற்றி, கண்டமானடிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து, கண்டமானடி, ஜானகிபுரம், கண்டம்பாக்கம் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிக்கப்படாத புதிய மேம்பாலம் வழியாக ஆபத்தான வகையில், சுற்றுப்பகுதி மக்கள் செல்லும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளுக்காக கண்டமானடிக்கு தினசரி 5 கிராமத்தினர், மாணவர்கள் செல்ல வேண்டும், இதனால், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்றனர். விழுப்புரம் ஆர்.டி.ஓ., காஜாஷாகுல்அமீது, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, பொது மக்களிடம் பேசினர். அப்போது, கலெக்டரிடம் தெரிவித்து, ரயில்வே அதிகாரியிடமும் பேசியுள்ளதால், ஓரிரு நாளில் மீண்டும் அந்த ரயில்வே கேட் திறக்கப்படும் என உறுதியளித்து சென்றனர். ஆனால், ஒரு வார காலமாகியும் திறக்கப்படாததால், அந்த கிராம மக்கள் ஜானகிபுரத்தில், தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை பேனர்களை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News