விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
அறுந்து கீழே கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு;
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்
விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (26). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கலைவாணி, எருமனந்தாங் கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் உளுந்து மற்றும் காராமணி பயிர் அறுவடை பணிக்காக சென்றார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் நடந்து செல்லும்போது அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் கலைவாணி தூக்கி வீசப்பட்டு மயங் கிய நிலையில் கிடந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று கலைவாணியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.