விழுப்புரம் சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

விழுப்புரம் அருகே சிறுமியிடம் ஏமாற்றி பலத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

Update: 2024-04-05 08:45 GMT

போக்சோ வழக்கு

விழுப்புரம் அருகே சிறுமியிடம் ஏமாற்றி பலத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. திண்டிவனம் தாலுக்கா ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் கஜேந்திரன்(19) இவர் வளவனூரில் உள்ள இவருடைய அக்கா வீட்டில் தங்கி செங்கல் சூளை வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த வந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்து கஜேந்திரன், கடந்த 20.12,2023 அன்று முதல் சிறுமியை ஏமாற்றி பலத்காரம் செய்ததில் அந்த சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்
Tags:    

Similar News