தாதிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கும்பாபிஷேகம் விழா
திண்டுக்கல் மாவட்டம் தாதிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
திண்டுக்கல் மாவட்டம் தாதிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சி தாதிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கொடிநாயக்கர் மந்தை திரு.நாகமுத்து பட்டத்துநாயக்கர் தலைமையில் நடைபெற்றது. தேவதுந்துமி தாரை தப்பட்டைகள் முழங்க புனிதநீர் கலசங்கள் கோவிலை வலம்வந்து கோபுர கலசங்களில் ஊற்றபட்டது.
இந்நிகழ்ச்சியில்அருள்மலை ஸ்ரீ ரெங்கநாத ஆலய அர்ச்சகர் சுந்தரராஜ்,கூவக்கப்பட்டி ஜமீன்தார் குடும்பத்தார்கள்,தென்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி இளங்கோ,ஊராட்சி மன்றம் தலைவர் கோமதி பாலசுப்பிரமணி, கம்பிளிநாயக்கர் ஊர்நாயக்கர்கள் சாணார்பட்டி, வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஊர்பொதுமக்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர் .