விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே விநாயகர் மாரியம்மன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2024-02-01 16:47 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், கள்ளிப்பாளையம் விநாயகர், மகா மாரியம்மன், மதுரை வீரன், தம்பி காளியம்மன்ஆலய புனராவர்த்தன  அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா ஜன. 30ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. அதே நாள் காவிரி ஆற்றிலிருந்து மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து பங்கேற்றனர். ஜன. 31ல் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 09:00 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை வட்டமலை அர்ச்சகர் சிவக்குமார சிவம் குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News