மகாதேவிமங்கலத்தில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
மகாதேவிமங்கலத்தில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணமல்லூர் அடுத்த மகாதேவி மங்கலம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பா பிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெ
ரணமல்லூர் அடுத்த மகாதேவி மங்கலம் கிராமத்தில் விநா யகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, வியாழக்கிழமை காலை யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதல் கால யாகபூஜை நடைபெற்றது. பின் னர், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, கஜபூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாகபூஜை, மகா சங்கல்பம், மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. இதையடுத்து, மேள தாளம் முழங்க யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை எடுத்து வந்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப் பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.