தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-18 04:17 GMT

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலை நியாயமான/ அமைதியான முறையில் நடத்திடும் வகையில் தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய 48 மணி நேரமான 17.04.2024 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணிமுதல் 19.04.2024 வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடியும்வரை வேட்பாளர்கள் / அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம்/ ஊர்வலம் / பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சினிமா / தொலைக்காட்சி அல்லது வேறு மின்னணு கருவிகள் வாயிலாக தேர்தல் தொடர்பான காட்சிகள் வெளியிடுவதற்கும், தேர்தல் பரப்புரை செய்வதற்காக இசை கச்சேரிகள் / நாடகங்கள் நடத்துவதற்கும் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

இதனை மீறுபவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் வரை சிறை தன்டணையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News