வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு
விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த இருபதாம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை தேசிய மற்றும் மாநில கட்சிகளான காங்கிரஸ் பாஜக தேமுதிக நாம் தமிழர் கடளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தமாக 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் 30 ஆம் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 3 மணி வரை யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறாததால் 27 பேர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளான காங்கிரஸ் வேட்பாளர் கைச்சின்னத்திலும் ,பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்திலும் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முரசு சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கவுசிக் ஒலிவாங்கி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல சுயேச்சையாக போட்டிடும் வேட்பாளர்களுக்கும் அவர்கள் கேட்ட சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. விருதுநகர் மக்களவைத் தேர்தலில் 27 பேர் போட்டியிட்டு களம் காண உள்ளனர். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தில் இந்த முறை பாரதிய பிரஜா கட்சி சார்பில் அசோக் குமார் போட்டியிடுகிறார். அதேபோல பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் எதிர்த்து அக்கட்சி நிர்வாகியும், டெல்லி மோடி மோடி அணியை சேர்ந்த வேதா தாமோதரன் சுயேட்சையாக தள்ளுவண்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். மொத்தமாக 17 சுயேச்சை வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். வரும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.