விருதுநகர் மினிபேருந்து மோதி பெண் படுகாயம்

விருதுநகர் அருகே மினிபேருந்து மோதி பெண் படுகாயம்அடைந்தார்.;

Update: 2023-12-31 13:49 GMT
மினி பேருந்து மோதி பெண் படுகாயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சுப்புலட்சுமி இவரது கணவர் கிருஷ்ணன். கிருஷ்ணன் மதுரை சாலையில் கே வி எஸ் நடுநிலைப்பள்ளி எதிரே மாட்டுக்கு தீவன தட்டை விற்கும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கணவருக்கு மதிய உணவு வழங்குவதற்காக அல்லம்பட்டி பகுதியில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையம் சுப்புலட்சுமி சென்றுள்ளார் பேருந்தில் இருந்து இறங்கி நடந்த பொழுது மினி பேருந்து ஒன்றை கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து சுப்புலட்சுமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்புலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

Advertisement

அப்பொழுது எதிர்பாராத விதமாக மற்றொரு அரசு பேருந்து சுப்புலட்சுமி கால்கள் மீது ஏறியதில் சுப்புலட்சுமி காயமடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து காயம் அடைந்த சுப்புலட்சுமி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சுப்புலட்சுமி மகள் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News