விருதுநகர்; அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்...

Update: 2024-04-29 09:13 GMT

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்...  

 விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு மற்றும் வத்தல் ஆகியவற்றின் வரத்து குறைந்தது. இதன் காரணத்தால் விலை உயர்ந்துள்ளது. மேலும் உள்நாட்டில் இறக்குமதி அதிகரிப்பால் பாமாயில் மற்றும் குண்டூர் வத்தல் விலையானது சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் விபரம் வருமாறு : பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.1540 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.40 குறைந்துள்ளது. எனவே, ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது. வத்தல் நாடு புதுசு வகை, கடந்த வாரம் ரூ.11 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் விற்பனையானது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து குறைந்து போனது. இதன் காரணத்தால் ஆரம்ப விலையானது ரூ.12ஆயிரம் முதல் அதிகபட்ச விலையாக ரூ.16 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. குண்டூர் வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ.13 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை விற்கப்பட்ட நிலையில், உள்நாட்டில் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்தால், குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.12ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு புதுசு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 12ஆயிரம் என விற்கப்பட்டது.

இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மூட்டை ஒன்று ரூ.12,150 என விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.12ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு ரூ.12, 100 என விற்கப்படுகிறது. இதேபோல் உளுந்து நாடு வகை கடந்த வாரம் ரூ.9100 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்து, ரூ.9,200 என விற்பனையாகிறது. இதேபோல் உளுந்து லயன் வகையானது 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில், .இந்த வாரம் மூட்டைக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.10,200 என விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News