விசிக - சார்பில் தமிழ்நாடு முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

விசிக - சார்பில் தமிழ்நாடு முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-05 06:16 GMT

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

விசிக - சார்பில் தமிழ்நாடு முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவித்து உரிய நிதியை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மின்னணு வாக்கு இயந்திர முறையை ஒழித்து, வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த தர்மபுரி BSNL அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மேலிட பொறுப்பாளர் நற்குமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் தர்மபுரி மைய மாவட்ட செயலாளர் பாண்டியன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர முகாம் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News