பெரம்பலூரில் விசிக ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை தாக்கியவர்களை கண்டித்து கைது செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
Update: 2024-02-19 15:52 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை தாக்கியவர்களை கண்டித்து கைது செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் . புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் கும்பல் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி. பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிப்ரவரி 19ஆம் தேதி பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரத்தினவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் மன்னர் மன்னன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மனோகரன், பிச்சை பிள்ளை, வேப்பூர் ஒன்றிய செயலாளர் வரதராஜன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், உள்ளிட் மாவட்ட அமைப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.