நாகையில் விசிகவினர் சாலை மறியல்

நாகை மாவட்டம் தாமரை குளத்தைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-12-30 10:24 GMT

சாலைமறியலில் ஈடுபட்ட விசிகவினர்

நாகை தாமரை குளம்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீதுகாவல்துறையினர் பொய் வழக்கு போட்டதாக கூறி நாகை புதிய பஸ் நிலையம் எதிரே விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார் துணை செயலாளர் சுரேஷ் பொருளாளர் ஜோதி பாஸ் நாகூர் நகரச் செயலாளர் தமிழ்முகம் ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த் வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விடுதலை சிறுத்தை கட்சியின் நாகை நகரச் செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட நாகை தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த வந்த நாளை ஏ. எஸ். பி. பழனிச்சாமி சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது தாமரைக் குளம் பகுதியில் தகராறு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்திவர்களை கைது செய்ய வேண்டும்.

பொய் வழக்கு போட்டு கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது

Tags:    

Similar News