அரியலூர் அருகே பாதை கேட்டு மனு அளித்த விசிகவினர்
அரியலூர் அருகே பாதை கேட்டு விசிகவினர் கலெக்டரிடம் மனுஅளித்தனர்.
அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கீழப்பழூவூர் அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் அண்ணா நகர் பகுதியில் தமிழக அரசால் வழங்கபட்ட வீட்டுமனை பட்டாவில் 10 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்நிலையில் தங்களது வீடுகளுக்கு செல்லும் பாதையை தனிநபர்கள் கம்பிவேலி போட்டு அடைத்துகொண்டு, வழிவிட மறுப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் இதுசம்மந்தமாக விசாரணை செய்யவரும் அதிகாரிகளை ஆக்ரமிப்பாளர்கள் பணி செய்யவிடாமல் திருப்பி அனுப்பி விடுவதாகவும், எனவே தமிழக அரசால் வழங்கபட்ட பட்டா நிலத்திற்கு செல்லும் பாதையை ஆக்ரமித்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது.
இதனையடுத்து அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் வழங்கபட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.