மறைமலைநகர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

மறைமலைநகர் அருகே காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

Update: 2023-12-30 13:51 GMT
காலி மது பாட்டில்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

ராணிப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளி பகுதியில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலைக்கு, காலி மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு 'எய்ச்ச சரக்கு வாகனம் சென்றது. இதை விஜய், 22, என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று மதியம் பூந்தமல்லி வழியாக வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக வந்த லாரி, ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு நோக்கி சென்றது. மறைமலை நகர் அடுத்த கீழ்கரணை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, லாரியின் இடதுபக்க டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி மீடியன் தடுப்புகளில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதனால், லாரியில் இருந்த காலி மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து மற்றும் மறைமலைநகர் போலீசார் சரக்கு வாகனத்தை மீட்டனர்.

பின், சாலையில் உடைந்து கிடந்த மதுபாட்டில்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்..

Tags:    

Similar News