ஆதரவற்றவர் உடலை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்
தர்மபுரி மதிகோண்பாளையம் அருகே உயிரிழந்த ஆதரவற்றவரின் உடலை மை தர்மபுரி அமைப்பின் தன்னாவலர்கள் நல்லடக்கம் செய்தனர்.
Update: 2024-06-27 03:45 GMT
தருமபுரி மதிகோண்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லான அள்ளி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துள்ளார். இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என தெரியவந்தது. இறந்த இவரது உடலை தருமபுரி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்து மதிகோன்பாளையம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜு, மைதருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சண்முகம், முஹம்மத் ஜாபர், மதிவாணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 96 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.