கெட்டுப்போன உணவை சாப்பிட்டவருக்கு வாந்தி:அதிகாரிகள் ஹோட்டலில் சோதனை
அழகியமண்டபத்தில் ஹோட்டலில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டவருக்கு வாந்தி.புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 15:00 GMT
அதிகாரிகள் ஆய்வு
குமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது இந்த ஹோட்டலில் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். அப்போது கடை ஊழியர்கள் அவருக்கு கெட்டுப் போன உணவை வழங்கியதாக கூறப்படுகிறது.இதனால் அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ஹோட்டலில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வெள்ளாங்கோடு கவுன்சிலர் வினோத் என்பவரும் அளித்த புகாரில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியதோடு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர்.