காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அதிமுக வினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

விடுமுறை தினத்தினை பயன்படுத்தி காஞ்சிபுரம் மாநகரில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

Update: 2024-04-15 16:13 GMT
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ம்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை கடும் வெயிலையும் பொருட்படுத்தாது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் வாக்காளர்கள் அனைவரையும் வீடுகளில் எளிதில் சந்திக்க முடியும் என்பதால் இன்று அதிகாலை ஆறு மணி முதலே காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் காஞ்சிபுரம் மாநகர் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கும் பணியை துவக்கினர். சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரும் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளருக்கு கோரிக்கை வைத்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இது போல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் அதிமுகவினர் மாலை 3 மணி முதலே தங்கள் பகுதி அதிமுகவின் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்னர். நகர் முழுவதும் அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விடுமுறை தினம் என்பதால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News