அதிமுக சார்பில் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில விவசாய பிரிவு தலைவர்.டி.ஆர்.அன்பழகன், எம். எல்.ஏக்கள் கோவிந்தசாமி, / சம்பத்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செய லாளர் பூக்கடைரவி வரவேற்றார்.
வருகிற ஜூன் 4-ம் தேதி தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குஎண்ணிக்கையின் போது அ.தி.மு.க. முகவர்கள் அனைவரும் குறிப் பிட்ட நேரத்துக்கு முன்னரே வர வேண்டும். தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிகளின்படி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் மிகவும் கண்காணிப்புடன்செயல்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை என்பது எந்த விதமுறைகேடும் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வக்கில் பிரிவு மாநில நிர்வாகி அசோக்குமார், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னு வேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செய லாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அ.தி. மு.க. வேட்பாளர் டாக்டர் ஆர்.அசோகன் நன்றி கூறினார்.