வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு!
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 17:09 GMT
ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ச.வளர்மதி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேமராக்கள் முறையாக இயங்குவதையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பையும் ஆய்வு செய்து பதிவேட்டில் கையெழுத்திட்டார்.