கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

பெரியூர் மலை கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு மூலம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது

Update: 2024-04-09 04:08 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியூர் மலை கிராமத்தில், நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு செய்யும் நோக்கில் மகளிர் சுய உதவி குழு வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியமான சாந்தி ஐஏஎஸ் மற்றும் வருவாய் அலுவலர் பால்பிரின்சிலி ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்பு பொது மக்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தாம்பூலத்தட்டில் வாக்களிக்க வேண்டும் என பத்திரிக்கை வைத்து ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்பு எனது வாக்கு விற்பனை அல்ல என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த செய்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News