வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து கோலப்போட்டி நடைபெற்றது.;
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து இன்று (20.01.2024) நடைபெற்ற சுயஉதவிக்குழுக்கான விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு தெரிவித்தாதவது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 15 ரங்கோலி கோலங்களை 9 வட்டாரங்களை சேர்ந்த 152 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வரைந்துள்ளனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற சுயஉதவிக்குழுக்களின் ரங்கோலி கோலங்களை 2 பார்வையாளர்கள் பார்வையிட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மல்பரி சுய உதவிக்குழு, திருவட்டார் முதல் பரிசும், மல்லிகை சுய உதவிக்குழு, விளாத்துறை இரண்டாம் பரிசும், பால்மா சுய உதவிக்குழு, சென்னகோட்டவிளை மற்றும் மற்றும் கதம்பம் சுய உதவிக்குழு, பறக்கை மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர் மற்றும் 7 ஆறுதல் பரிசுகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. என கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், திட்ட இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) பீபீ ஜான், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.