குமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் இன்று (17.04.2024) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். இ.ஆ.ப., கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தி தெரிவிக்கையில்-
இன்று கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் முதல் வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் வண்ண பலூண்களை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்லுரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.