ஆட்சியர் தொடங்கிவைத்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 15:26 GMT
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்போம் ஜனநாயகத்தை காப்போம், வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம், வாக்களிப்போம் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்