வாக்காளர் விழிப்புணர்வு தெரு நாடகம்
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரு நாடகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.;
Update: 2024-04-15 06:57 GMT
கலைஞர்களுடன் ராதாகிருஷ்ணன்
சென்னை மெரீனா கடற்கரை நேதாஜி சிலை அருகில், வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை (Voters awareness Street play) மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் தேர்தல் நடத்தும் அலுவலர் (மத்திய சென்னை) மற்றும் வட்டார துணை ஆணையர் (மத்தியம்) ஜெ.பிரவீன் குமார், போதி சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் ஆனந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.