சங்கரன்கோவிலில் வாக்காளர் சேர்க்கை முகாம் - எம்.எல்.ஏ. ஆய்வு
Update: 2023-11-06 01:55 GMT
எம்.எல்.ஏ ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் பூத் எண் 16-ல் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது சங்கரன்கோவில் நகர பூத் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு, தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செயலாளர் கோமதிநாயகம், பூத் பொறுப்பாளர்கள் சங்கரமகாலிங்கம், மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.