மல்லசமுத்திரத்தில் வாக்குபதிவு விழிப்புணர்வு
மல்லசமுத்திரத்தில் 100சதவீத வாக்குபதிவு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-22 13:24 GMT
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்
தற்சமயம் மக்களவை பொதுத்தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்த தேர்தலில் மக்கள் 100சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும், மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என வலியுறுத்தியும் நேற்று மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து துவங்கி, அம்மன்கோவில் வீதி, நான்குரதவீதிகள், பேருந்துநிலையம் வழியாக பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஈ.ஓ.,ராஜசேகரன், வி.ஏ.ஓ.,ராஜா, மகளிர்சுய உதவி குழுவினர், துப்பரவுபணியாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.