வாக்காளர் தின உறுதி மொழியேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் தின உறுதி மொழியேற்பு;
Update: 2024-01-25 10:04 GMT
வாக்காளர் தின உறுதி மொழியேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதன்கிழமை நத்தம் வட்டார கல்வி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர். இதற்கு வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் ராஜம் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர் சுதா, கற்பகம் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர். அப்போது வாக்களிப்பது நமது தார்மீக உரிமை, வாக்களிப்பதின் மூலம் ஜனநாயகம் காப்போம் என்பது போன்ற வாசகங்களைக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.