வாக்கு விற்பனைக்கு அல்ல: நாகையில் கையெழுத்து இயக்கம்

நாகையில் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-25 16:56 GMT

கையெழுத்து இயக்கம் 

நாகை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு செலுத்துதலை முன்னெடுத்தும் " என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

100 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் இந்திய தேர்தல் ஆணையமானது 2024-ம் ஆண்டு 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் 100 % வாக்கு செலுத்துதலின் அவசியத்தை முன்னெடுத்தும்,

நேர்மையாக வாக்கு செலுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் என் வாக்கு வாடகைக்கு அல்ல என்ற தலைப்பின் கீழ் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஆணையத்திலிருந்தும், மகளிர் திட்டம் அமைப்பில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியானது RDO அலுவலகத்திலும் அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிக்கப்பட்டது.

Tags:    

Similar News