100% வாக்குப்பதிவு வண்ண பலூன் பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர்
கரூரில் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வண்ண பலூனை மாவட்ட ஆட்சியர் பறக்க விட்டார்.
100% வாக்குப்பதிவு- வண்ண பலூன் பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,இன்று 18 வயது முடிந்த வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் வகையில் வண்ண பலூனை பறக்க விட்டு, அதில் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும், குறிப்பிட்ட வாசகங்களை பதிவு செய்து, இன்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தங்கவேல் தலைமையில் பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.