100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி நூதன அழைப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி தேர்தல் அழைப்பு விடுக்கும் பணி நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிகளை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் சேகர் அறிவுறுத்தலின் பெயரிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு வீடாக சென்று நகராட்சி சார்பில் தேர்தல் அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பெண் பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு வீடாக சென்று வாக்களிக்க வேண்டிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர் தங்களது வாக்குச்சாவடி அறிந்து கொள்ள பத்திரிக்கையில் qr கோடு உள்ளது அதனை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளவும் கூறினர். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும் என எடுத்துக் கூறினர்.
திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள் நகராட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.