அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குடும்பத்தினருடன் தேவனூரில் வாக்கு அளிப்பு
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தேவனூரில் வாக்களித்தார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர். அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவும்,தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் அவரது மனைவி காயத்ரி தேவி,
அவரது தாயார் தேவனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜேஸ்வரி, மற்றும் அவரது தம்பி சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர். வாக்கு செலுத்தி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் இன்று எனது சொந்த ஊரான தேவனூரில் எனது வாக்கினை செலுத்தி. ஜனநாயக கடமை ஆற்றியுள்ளேன். தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல இந்தியாவின் வெற்றி தமிழகத்தில் இருந்து துவங்குகிறது. தமிழ்நாட்டின் வெற்றி என்பது இந்திய கூட்டணியின் வெற்றி. பாசிச ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய மோடியின் ஆட்சியை நீக்குகின்ற வகையில் தமிழகa முதலமைச்சர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளையும் வெற்றி பெரும்.. சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற தேர்தலில் வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.