வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்வு!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்றம் வாரியாக முதற்கட்ட ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2024-04-02 02:41 GMT

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்றம் வாரியாக முதற்கட்ட ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.


பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இன்று (01.04.2024), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேர்தல் பொது பார்வையாளர் திருதிவேஷ் ஷெஹரா,   மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி,  ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை சட்டமன்றம் வாரியாக முதற்கட்ட ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்,ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News