வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-23 15:14 GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில நிர்வாக குழு முடிவின்படி புதிய பென்சனை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தினை அமல்படுத்திடவும் மற்றும் அனைத்து துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பிடக்கோரியும் மேலும் பல்வேறு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வாணாபுரம் வட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News