உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்!
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
Update: 2024-02-23 04:15 GMT
தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாநகராட்சி ரூ.763, நகராட்சி ரூ. 687, பேரூராட்சி ரூ.610, ஊராட்சி ரூ.462 ஊதியம் வழங்க வேண்டும், மாநகராட்சி தொழிலாளர்கள், ஊராட்சி துய்மை காவலர், OHT ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ஊழியர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.