வாலாஜாபாத் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வாலாஜாபாத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 87 பயனாளிகளுக்கு, ரூ.72.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-24 06:36 GMT

மக்கள் தொடர்பு முகாம் 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனூர் கிராமத்தில், நேற்று, மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இம்முகாமில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இம்முகாமை முன்னிட்டு, கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி முதல், டிச., 19ம் தேதி வரை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஜாதி சான்று, குடும்ப அட்டை, மகளிர் சுயஉதவி குழு வங்கி கடன், தொழில் கடன் மானியம் என, 87 பயனாளிகளுக்கு, 72.29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அரசு சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



Tags:    

Similar News