குடிநீரில் குளோரின் கலக்காத 194 லாரிகளுக்கு எச்சரிக்கை

குடிநீரில் குளோரின் கலக்காத 194 லாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-19 09:37 GMT
குடிநீரில் குளோரின் கலக்காத 194 லாரிகளுக்கு எச்சரிக்கை...
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலங்களில், குடிநீர் இணைப்பு முழுமை பெறாததால், பெரும்பாலான வீடு, வணிக நிறுவனங்களுக்கு, லாரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீரினால் பரவும் நோயை தடுக்க, 1,000 லிட்டருக்கு, 4 கிராம் வீதம் குளோரின் கலக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், பெரும்பாலான லாரிகளில் குளோரின் கலக்காமல், குடிநீர் வினியோகம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சார்பில், குடிநீர் லாரிகளை மடக்கி சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள், ஓ.எம்.ஆர்., செம்மொழி சாலை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி மற்றும் இ.சி.,ஆர்., உத்தண்டி ஆகிய பகுதியில், குடிநீர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். மொத்தம் 210 லாரிகளில், 'குளோரஸ் ஸ்கோப்' என்ற கருவி வைத்து சோதனை செய்யப்பட்டது.

இதில், 16 லாரிகளில் மட்டும் குளோரின் இருப்பதும், 194 லாரி குடிநீரில் குளோரின் இல்லாததும் தெரிந்தது. இதையடுத்து, 194 லாரிகளில் உள்ள குடிநீரில், 1,000 லிட்டருக்கு 4 கிராம் வீதம் குளோரின் கலந்து அனுப்பினர்.

அடுத்த முறை குளோரின் கலக்காமல், குடிநீர் வினியோகித்தால், லாரிகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என, லாரி ஓட்டுனர்களுக்கு, அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News