பாலப் பணி பகுதியில் எச்சரிக்கை பலகை தேவை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2024-06-28 06:58 GMT
ஆலங்குளத்தில் பாலப் பணி பகுதியில் எச்சரிக்கை பலகை தேவை

தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலைக்காக ஆலங்குளம் காவல் நிலையம் அருகே ஊா்மடையில் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் எதிரெதிா் திசையில் பயணிக்கும் வாகனங்கள் தென்புறம் உள்ள சாலையில் செல்கிறது. எனினும் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதாக சாலையில் இரு பக்கத்திலும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகை, தடுப்புகள், இரவில் ஒளிரும் ஸ்டிக்கா்கள் எதுவும் இப்பகுதியில் வைக்கப்படவில்லை.

மிகவும் அருகில் வந்த பின்னரே பணிகள் நடைபெறுவது குறித்து வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு சிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன.

குறிப்பாக, இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் முன்னா், நெடுஞ்சாலைத்தறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News