டீசலில் தண்ணீர் கலப்படம் - பெட்ரோல் பங்க் முற்றுகை
ராஜபாளையம் அருகே பெட்ரோல் பங்கில் விற்கப்பட்ட டீசலில் தண்ணீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Update: 2024-01-28 11:10 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு அருகே செயல்படக்கூடிய இந்தியன் ஆயில் பெட்ரோல் பல்க் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் நடத்தி வருகிறார் இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முறம்பு பகுதியில் செயல்படக்கூடிய பள்ளி மற்றும் நூர்ப்பாலைக்கு செல்லக்கூடிய பணியாளர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பஸ் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல் நிரப்பி உள்ளனர் அப்பொழுது தனியார் பள்ளி வாகனம் ஒன்று பல்க்கில் டீசல் போட்டவுடன் வண்டி ஆப் ஆனதால் டிரைவர் மாரிமுத்து என்பவர் டீசலை பரிசோதித்து பார்த்தபோது டீசல் டேங்க் முழுவதும் தண்ணீர் கலந்துள்ளதை கண்டறிந்து பெட்ரோல் பங் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார் அதற்கு பெட்ரோல் பங்க் நிர்வாகத்திலிருந்து சரியான பதில் வராமலும் உரிமையாளருக்கு போன் போட்டால் போனை எடுக்காமல் அலட்சியப்படுத்துகிறார் மேலும் மேலாளர் செல்போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தியதால் டீசல் நிரப்பிய பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உடனடியாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெட்ரோல் பல்க் கில் டீசல் போட எந்த வாகனும் பல்க்கிற்க்குள் அனுமதிக்காமல் கயிறு கட்டினர் மேலும் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தை களைந்து சென்றனர்.