மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றம்

மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2023-12-02 09:42 GMT
மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி.2411 ஏக்கர் பரப்பளவு 7500 ஏக்கர் பாசன பரப்பும் 24 அடி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை வைத்து இருந்த நிலையில் ஏரியை தூர்வாரி கரையைஅதன் முழு கொள்ளளவான 694 மில்லியன் கன அடியில் இருந்து 791 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்படவும் பதகு புதுப்பிக்கவும் தமிழக அரசு ஏரிபராமரிப்பு பணிக்கு 120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏரி தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

ஒரு வருடம் ஆறு மாதங்கள் ஆகியும். 60% பணிகள் முடிக்கப்பட்டு40 %சதவீத பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது தற்பொழுது வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் ஏரியில் கிளியாறு நெல்வாய் மடகு வழியாக அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது ஏரியில் கட்டுமான பணி நடைபெற்றுள்ளதால் ஏரியின் கரையை உடைத்து ஏரிக்கு வரும் 1000 கனஅடிதண்ணீரில் 750 கன அடி தண்ணீர்வெளியேற்றி வருகின்றனர்..

அதிகளவு தண்ணீர் வெளியேறுவதால் ஏரிக்கரையின் கீழ் தற்காலிக சாலை அமைத்து அதன் கீழ் ராட்சத குழாய்கள் புதைத்து தண்ணீரை விளைநிலங்கள் வழியாக கிளியாற்றில் வெளியேற்றி வந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஏரியில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறுகிறது. இந்த தண்ணீர் தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கி உள்ளதால் குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் பள்ளியை தண்ணீர் சுற்றி தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் மழை பெய்தால் தண்ணீர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருவதாகவும் இந்த ஆண்டும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மதுராந்தகம் நகரில் உள்ள மக்களுக்கு இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளதுஆகவே இப்ப பணியினை விரைவாக செய்து முடிக்க பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Tags:    

Similar News