மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால், மேட்டூர் அணையில் நீர்வரத்து சரியத் துவங்கியுள்ளது.
Update: 2024-03-05 09:00 GMT
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 54 கன அடியிலிருந்து இன்று 42 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 63.40 அடியாகவும், நீர் இருப்பு 27.28 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.