மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 544 கன அடியாக சரிந்தது.
Update: 2024-01-08 03:08 GMT
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 555 கன அடியிலிருந்து இன்று 544 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 71.19 அடியிலிருந்து, 71.17 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 33.73 டி.எம்.சி,யிலிருந்து.33.71 டி.எம்.சி.யாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.