அணையில் நீர் வரத்தால் தாமிரபரணிக்கு நீர் திறப்பு
கனமழையால் திறப்பு படிப்படியாக அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்;
Update: 2023-12-17 05:57 GMT
அணையில் நீர் வரத்தால் தாமிரபரணிக்கு நீர் திறப்பு
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பாபநாசம் சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து 10000 கன அடி அளவிற்கு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக தாமிரபரணியில் 3000 கன அடி நீர் இன்று 17/12/23 திறக்கப்படுகின்றது. மேலும் மழையால் நீர் வருவதை பொருத்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.