குடிநீர் குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்

நெல்லை மாநகர பேட்டை சேரன்மகாதேவி சாலையில் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது

Update: 2024-06-16 08:16 GMT

நெல்லை மாநகர பேட்டை சேரன்மகாதேவி சாலையில் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது

நெல்லை மாநகர பேட்டை சேரன்மகாதேவி சாலையில் அரியநாயகபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News